என்னும் வேற்றுமையிலும் ஒற்றுமையுள்ள இளைய பாரதத்தின் மக்கள் தொகையில் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் இளைஞர்களே.
ஒரு நாட்டினுடைய வள்ர்ச்சி என்பது அதன் இயற்கை வளம் மற்றும் மனிதவளத்தைச் சார்ந்ததே. உலகில் இயற்கை வளம் மிகுந்த நாடுகளும் அதனை கையாள மனிதவளத்தை நம்பியே உள்ளன. உலகிலேயே இளைஞர்களை அதிகம் கொண்ட மனித வளம் மிக்கநாடு இந்தியா (Personality Potential Index) அதிகமுள்ள மனித வளம் இந்தியாவில் தான் இருக்கிறது. உலக நாடுகள் அனைத்தும் எதிர் வரும் 20 ஆண்டுகளுக்கு இந்தியாவினுடைய மனிதவளத்தையே நம்பியுள்ளன. பொதுவாக வேலைவாய்ப்பு என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு. இச்சூழலில் நம்முடைய இளைஞர்களுடைய திறனை வளர்த்து உலகநாடுகளுக்கு ஏற்றவகையில் உருவாக்குவது தொழிற் பயிற்சிநிலையங்களின் தலையாய கடமையாகும்.
தொழிற்பயிற்சி நிலையங்களே வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு ஏற்ற கைவினைஞர்களை உருவாக்கும் முதுகெலும்பாக உள்ளன. இப்பயிற்சி நிலையங்களில் புதிதாக பயிற்சி பெறுவதற்குமுற்றிலும் புதிய தொழில் நுட்பங்களை பயிற்றுவித்தல (New Skilling), ஏற்கனவே பயிற்சி பெற்று சென்ற பயிற்சியாளர்களுக்கு அவர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் (Upskilling ), புதிய இயந்திரங்களில் மறுபடி பயிற்சி அளித்தல் ( Reskilling ) ஆகியவை செவ்வனவே செயல்படுத்தப்படுகின்றன.
திறன் மேம்பாடு என்பது காலவரையறை ஏதுமின்றி தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகும். உழைக்கும் வயதிலுள்ள தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்து, அவர்களின் திறனை மேம்படுத்துவதன் மூலமே அவர்களை திறமையான தொழில் முனைவோராக உருவாக்க முடியும்.
S.Ramesh Kumar B.E.,M.B.A.,
Deputy Director